வடக்கு மற்றும் கிழக்கில் 2025ஆம் ஆண்டு இதுவரை இராணுவம் கையகப்படுத்திருந்த 672 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் இன்று (2025.10.23) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
காணி விடுவிப்பு
பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பாதுகாப்புத் துறைச் சபைக்கு காணிகள் தொடர்பான தகவல்களைச் சமர்ப்பித்த பின்னர் இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

