தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து 222 தனிநபர்களின் பெயர் விபரங்களையும் உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அநுர அரசு எடுத்துள்ள இத்தீர்மானத்தின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள அதேவேளை இது தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் பாதிப்பாக அமையுமோ என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் முந்தைய அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் எவ்வித வித்தியாசங்களும் இல்லை.
15 அமைப்புகள் மற்றும் 222 தனிநபர்களுக்கும் தடை தடை விதித்து தேடுதல் அறிக்கையை இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை காணவோ தமிழ் மக்களுக்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டவோ இந்த அரசாங்கம் தயாரில்லை” என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,