வந்ததே கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்.
எந்த வாரத்திலும் இல்லாத அளவு கடந்த வாரத்திற்கான ரேட்டிங்கை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தார்கள், காரணம் எல்லா தொலைக்காட்சியிலும் டாப் தொடர்களின் கதைக்களம் விறுவிறுப்பின் உச்சமாக இருந்தது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்றாக சிங்கப்பெண்ணே தொடரில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் டிராக் தான் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து யாரால் இப்படி ஆனது என குழப்பத்தில் உள்ளார். எப்போது, யாருக்கு இந்த உண்மை தெரியும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் காண்போம்.
கடந்த வார டிஆர்பி விவரப்படி சிங்கப்பெண்ணே 9.34 எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் டாப் தொடராக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் டாப் 5ல் 4வது இடம் பிடித்தாலும் அந்த தொலைக்காட்சியில் முதலில் உள்ளது.
சரி நாம் இப்போது தமிழகத்தில் டாப் 5 இடத்தை பிடித்த தொடர்களின் விவரத்தை காண்போம்.
- சிங்கப்பெண்ணே- 9.34
- மூன்று முடிச்சு- 9.09
- கயல்- 8.78
- சிறகடிக்க ஆசை- 8.50
- மருமகள்- 7.92