நடிகை சித்ரா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களை கவர்ந்து வந்தவர் தான் சித்ரா.
சொல்லப்போனால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததே அவர் தான் என்று கூட கூறலாம்.
ஆனால் அவர் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், அவரது தற்கொலைக்கான நிஜ காரணம் இதுவரை தெரியவில்லை.
அப்பா மரணம்
இந்த நிலையில் மறைந்த நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த தகவல் கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.