காஞ்சனா
ராகவா லாரன்ஸ் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த படம் என்றால் அது காஞ்சனா.
முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைய தொடர்ந்து 3 பாகங்கள் வெளியானது, அனைத்திற்கும் மக்களிடம் பேராதரவு கிடைத்தது.
2011ம் ஆண்டு காஞ்சனா படம் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது, பின் 2015ம் ஆண்டு காஞ்சனா 2 வர 2019ம் ஆண்டு காஞ்சனா 3 வந்தது.
கடைசியில் 2020ம் ஆண்டு லட்சுமி என்ற படம் வெளியானது, இது ஹிந்தியில் தயாரான படம்.
காஞ்சனா 4
இந்த நிலையில் காஞ்சனா 4 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. Goldmine பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 23ம் தேதியே தொடங்கிவிட்டதாம்.
4 ஆண்டுகளுக்கு பிறகு தனது திருமண புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யா… தெறிக்கும் லைக்ஸ்
இதில் ராகவா லாரன்ஸ், பூஜா ஹெக்டே நடிக்க இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பாலிவுட் சினிமாவின் நடன குயின் நோரா படேகி. பான் இந்தியா படமாக உருவாகி, திரையரங்கில் ரிலீஸான 8 வாரங்களுக்கு பின் OTTயில் வெளியாக உள்ளதாம்.