முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் அமைச்சரவை தொடர்பான வாதத்தை நிராகரிக்கும் முன்னணி சட்டத்தரணி

Courtesy: Sivaa Mayuri

நாடாளுமன்றின் ஆரம்ப கூட்டத்திற்கு முன்னதாக பிரதமரும் அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்திருக்க முடியாது என சில தரப்பினர் முன்வைத்துள்ள கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

தமது ஃபேஸ்புக் பதிவில், இதனை குறிப்பிட்டுள்ள பீரிஸ், தவறான கருத்து ஒன்று இதன் மூலம் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிப்பு

பிரதமரும் அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்வதற்காக, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வரை காத்திருக்க வேண்டும் என்ற கருத்து தவறானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அநுரவின் அமைச்சரவை தொடர்பான வாதத்தை நிராகரிக்கும் முன்னணி சட்டத்தரணி | Lawyer Rejects Anura S Cabinet Related Argument

வரலாற்று ரீதியாக, பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய பிரதமரும் அமைச்சரவையும் எப்போதுமே நியமிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திற்கு முன்னதாகவே பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர்களான ஜே.ஆர்.ஜெயவர்தன, டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் முறையே 1977, 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திற்கு முன்னதாக, அந்தந்த அமைச்சரவைகளுடன் பதவியேற்றனர்.

2001 டிசம்பரில் ரணில் விக்ரமசிங்கவும்;, 2004 ஏப்ரலில் மஹிந்த ராஜபக்சவும், 2015 ஆகஸ்டில் ரணில் விக்ரமசிங்கவும், 2020 ஆகஸ்டில் மஹிந்த ராஜபக்சவும் இதே முறையிலேயே பதவியேற்றனர் என்று என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கூட நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரவையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அங்கத்தவர்களாக செயற்படுவதாக சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.