வாழ்வுக்கான தேடலோடு ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்கான பாதைகளை தாங்களே உருவாக்கி கொள்கின்றார்கள்.அவர்களுடைய பயணத்தில் தடைகளும் சவால்களும் தங்கு தடையின்றி எழத்தான் செய்யும்.
அந்தவகையில் வவுனியா(Vavuniya) கணேசப்புரம் பகுதியை சேர்ந்த ஒரு
முயற்சியாளரின் கதை இது.
இவர்கள் தங்களுடைய வீட்டிலேயே தோற்பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.அனைத்துவகையான பைகளையும் அவர்களே வீட்டில் தயாரித்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்கின்றனர்.
மேலும் இங்கு விற்பனையாகி சந்தைக்கு கொண்டு செல்லும் பொருட்களின் விற்பனை விபரங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
குடும்ப அங்கத்தவர்களுடைய உழைப்பை பயன்படுத்தி முயற்சி செய்கின்ற இவர்களுக்கு பொருளாதார சவால்களும் அழுத்தங்களை கொடுக்கின்றன.
இந்த முயற்சியாளர்கள் தமக்கு சில கை கொடுத்தல்களை கொடுத்தால் பணயப்படலாம் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார்கள்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் விரிவாக காணலாம்.
https://www.youtube.com/embed/BYgo5XPKoI8