முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

கட்சித் தலைமையை விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்காவுக்கு(Sarath Fonseka) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் செயற்குழு இந்த வாரத்தில் கூடி சரத் போன்சேக்காவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தலைமையை விமர்சிப்பது

கட்சிக்குள் இருந்து கொண்டு தலைமையை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல எனவும் அவ்வாறு கட்சித் தலைமையை விமர்சிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை | Legal Action Will Be Taken Against Sarath Fonseka

இதேவேளை சரத் பொன்சேகா ஜனாதிபதியுடன் இணைவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறு எனினும் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

ராஜித, ஜனாதிபதி ரணிலை புகழ்ந்தாலும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை, சரத் பொன்சேகா போன்று விமர்சனம் செய்யவில்லை என ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டி உள்ளார். 

கடந்த வார நாடாளுமன்றில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை(Sajith Premadasa) மறைமுகமாகத் தாக்கி பேசியிருந்தார்.

இதன்போது தன்னை நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கவிடாது எதிர்க்கட்சிகள் தடுப்பதற்கு முயற்சிப்பதாக பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆலோசனை

இதேவேளை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு(Lakshman Kiriella) தனக்கு நாடாளுமன்றில் பேசுவதற்கு நேரம் வழங்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்சேகா தெரிவித்திருந்தார்.

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை | Legal Action Will Be Taken Against Sarath Fonseka

இதனை தொடர்ந்து கட்சி மீது வழக்கு தொடுத்து தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு எவ்வாறு நாடாளுமன்றத்தில் கால அவகாசம் வழங்க முடியும் என எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இவ் விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.   

மேலதிக தகவல்-கமல் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.