லியோ
லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி மாபெரும் எதிர்பார்ப்புடன் 2023ல் வெளிவந்த படம்தான் லியோ.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், மடோனா, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளிவந்தது. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்தனர். ஆனால், இப்படம் முழுமையாக ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.


Dude படத்தில் நடிக்க ஹீரோ பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பாக்ஸ் ஆபிஸ் விவரம்
இன்றுடன் இப்படம் வெளிவந்த இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில், லியோ படம் உலகளவில் ரூ. 590 கோடி முதல் ரூ. 600 கோடி வரை வசூல் செய்தது.

விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் இதுவே ஆகும். இந்த வசூல் சாதனையை கடைசியாக வெளிவரவிருக்கும் ஜனநாயகம் முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

