பிரிந்து கிடக்கும் எமது தமிழ் தேச உறவுகளை ஒன்றுபடுத்தி ஒரு தேசமாக திரட்டுவதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது.
எனவே கடந்தகால அனுபவங்களை அடிப்படையாக கொண்டும் எமது தமிழ் தேசத்தை பலமாக்கியும் எமது உரிமைகளை வலுவுள்ளதாக மாற்றுவதற்காகவும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது அனைவரதும் கடமையாகும் என சமுக அரசியல் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது எதிர்ப்பு அரசியல் அல்ல.இலங்கை தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்றும் அல்ல.
எமது உரிமைகளை நாம் ஒருமித்து தெரிவிப்பதற்கு தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது அவசியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்,
https://www.youtube.com/embed/fx8_E-Oi-kA