முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரோஹன விஜேவீர கொலை: நீதி கோரி அநுரவிற்கு பறந்துள்ள கடிதம்

1988-89 இல் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீர மற்றும் போரின் போது கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உடனடியாக தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக விரோத அடக்குமுறை வரலாற்றைக் கடந்து வந்த இலங்கை சமூகம் அந்த நிகழ்வுகள் தொடர்பான உண்மையான தகவல்களை வெளிக்கொணர வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் தலைவர்கள்

ஆட்கடத்தல், காணாமல் ஆக்குதல், கொலைகள் உள்ளிட்ட கடந்தகால குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான சரியான தருணம் வந்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோஹன விஜேவீர கொலை: நீதி கோரி அநுரவிற்கு பறந்துள்ள கடிதம் | Letter To President Justice Rohana Wijeweera Dead

தடுப்புக் காவலில் வைத்து கொல்லப்பட்ட ரோஹன விஜேவீர உள்ளிட்ட ஜே.வி.பி.யின் தலைவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பது தற்போதைய ஜனாதிபதி அநுர குமாரவின் பொறுப்பு எனவும் குறித்த கட்டிசி தெரிவித்துள்ளது.

தேவையான ஆதரவு

அதன் போது, 1988-1989 காலகட்டத்தில், போரின் போது நடந்த குற்றங்கள் குறித்து முழு விசாரணை அவசியம் என்று மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரோஹன விஜேவீர கொலை: நீதி கோரி அநுரவிற்கு பறந்துள்ள கடிதம் | Letter To President Justice Rohana Wijeweera Dead

முன்னிலை சோசலிசக் கட்சி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அவ்வாறான முழுமையான விசாரணைக்கு தேவையான ஆதரவை வழங்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்