பிரதீப் ரங்கநாதன் LiK
தமிழ் சினிமாவின் இளம் வசூல் நாயகனாக மாறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளிவந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது என்று இல்லாமல், இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கிறது.

லவ் டுடே, டிராகன், Dude ஆகிய மூன்று படங்களும் ரூ. 100 கோடி வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் LiK (Love Insurance Kompany).

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான், கௌரி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரீ-ரிலீஸான அட்டகாசம் படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
தள்ளிப்போன ரிலீஸ்?
இம்மாதம் 18ஆம் தேதி LiK திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தள்ளிப்போய்விட்டதாக சொல்லப்படுகிறது. 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி காதலர் தினத்திற்கு முன் வெளிவரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


