நடிகர் கூல் சுரேஷ் சில படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்தவர். அவர் நடித்து பிரபலம் ஆனதை விட தியேட்டர் வாசலில் ‘வெந்து தணிந்தது காடு.. வணக்கத்தை போடு’ என youtubeர்களிடம் வித்தியாசமாக பேசி பெரிய அளவில் இணையத்தில் பிரபலம் அடைந்தார்.
அவ்வப்போது படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் செய்யும் சில விஷயங்களும் இணையத்தில் வைரல் ஆகும். GOAT படத்திற்கு ஆட்டுக்குட்டி தூக்கி கொண்டு செல்வது, ஹெலிகாப்டரில் வருகிறேன் என சொல்லி பொம்மையை எடுத்து காட்டுவது என அவர் பல விதமான விஷயங்களை செய்து இருக்கிறார்.
சாட்டையால் அடித்துக்கொண்ட கூல் சுரேஷ்
இந்நிலையில் கூல் சுரேஷ் இன்று தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்டு இருக்கிறார். திரு.மாணிக்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் இதை செய்து இருக்கிறார்.
அடித்துக்கொள்ளும்போது படத்தின் பெயர், தயாரிப்பாளர் லிங்குசாமி பெயர் ஆகியவற்றை கூறி அவர் அடித்துக்கொண்டார்.
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட நிலையில், அதை பின்பற்றி கூல் சுரேஷ் இப்படி அடித்துக்கொண்டு இருக்கிறார்.