சிறீதரனின் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறுகின்றார் அதேபோல் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரைப்பார்த்து திருந்த வேண்டும் என தமிழ்பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை இடம் பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “நான் எவரையும் வற்புறுத்தி எனக்கு ஆதரவு தாருங்கள் என கூறவில்லை.
அவர்கள் உணர்ந்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியை பொறுத்த மட்டில் பெரும்பாலானவர்கள் கொள்கைகளிலே உடன்பாடாக இருக்கின்றார்கள். அவர்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.