முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சகல கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் இணையுங்கள் – முன்னாள் எம்.பி அழைப்பு

எதிர்வரும் தேர்தலில் சகல கட்சிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டு
சின்னத்தில் ஒன்றாக போட்டியிடவேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (Sivapragasam Sivamohan) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் (vavuniya) அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (26.09.2024) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.

மதுபான நிலைய அனுமதிப்பத்திரத்தை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை இதுவரை நான் பார்க்கவில்லை என்றும் இவர் இதன்போது தெரிவித்துள்ளார். 

தமிழர்களின் ஒன்றுமை

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் பொதுத் தேர்தலானது தமிழர்களின் ஒன்றுமையை வலுப்படுத்தி இருப்பை
காக்கவேண்டிய ஒரு தேர்தல்.

சகல கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் இணையுங்கள் - முன்னாள் எம்.பி அழைப்பு | Liquor Licenses Permits Issued To Parliamentarians

அந்த ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் முன்னாள்
இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 11 பேர் மாவை சேனாதிராஜாவை சந்தித்து
கலந்துரையாடினோம்.

சகல கட்சிகளையும் உள்வாங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய அணியாக
செயற்ப்படுவதனை வலியுறுத்தியே அந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. எனவே அனைத்து
கட்சிகளும் ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ்த்
தேசியகூட்டமைப்பாக தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக
போட்டியிடவேண்டும்.

இது எனது சொந்த கருத்தாக இருந்தாலும் தமிழரசுக் கட்சியின்
அதிகமானோரது நிலைப்பாடும் இதுவே.

இது தொடர்பான இறுதி முடிவினை எமது கட்சியின் மத்தியகுழு விரைவில் எடுக்கும்.

கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

மாவை சேனாதிராஜா ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து
அதனை எமது மத்திய குழுவிற்கு அறிவிப்பார். மிக குறுகியகாலமே எமக்கு உள்ளது. எனவே விவேகமாக சிந்திக்கவேண்டும்.

சகல கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் இணையுங்கள் - முன்னாள் எம்.பி அழைப்பு | Liquor Licenses Permits Issued To Parliamentarians

பிரிந்து நின்று தேர்தலினைச் சந்தித்தால்
தமிழர்களது இருப்பு கேள்விக்குறியாக்கப்படும்.

நாடாளுமன்றுக்கு புதியவர்கள் தேவை இளைஞர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது
உண்மை.

அதேநேரம் நாடாளுமன்றில் தமிழ்த் தேசிய இருப்பை தக்கவைப்பதற்கு ஆளுமையான
அனுபவமுடைய மூத்தவர்களும் தேவை.

கடந்த காலங்களில் பங்காளிக் கட்சிகளுக்கு வன்னி மாவட்டத்தில் அதிகமான ஆசனங்கள்
கொடுக்கப்பட்டு யாழ் மாவட்டத்தில் கொடுக்கப்படாத நிலமை இருந்தது.

அதனை
ஒற்றுமையாகவே நாம் செய்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவொரு கட்சிகள் மேலோங்கி
இருக்கிறது. அது ஒரு தீர்க்கப்படமுடியாத பிரச்சனை அல்ல.

அத்துடன் தமிழர்களது விடயங்களை முன்னிலைப்படுத்தி கொள்கைகளை
விட்டுக்கொடுக்காமல் தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களில் அரசாங்கத்துடன்
இணங்கி செல்லவேண்டிய நிலைமையும் ஏற்ப்படும் அது தொடர்பாக பரிசீலிப்போம்

இதேவேளை, மதுபான நிலையத்திற்கான அனுமதிப் பத்திரத்தை தமிழரசுக்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை
இதுவரை நான் பார்க்கவில்லை. அது இன்றுவரை எமது கைகளில் கிடைக்கவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.