முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளூராட்சிமன்ற தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை (6) காலை இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம்

அந்தவகையில், யாழ்ப்பாணம் மாவட்ட
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்று காலை எடுத்து
செல்லப்பட்டுள்ன.

உள்ளூராட்சிமன்ற தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Local Election Ballot Boxes To Polling Stations

இன்று காலை 8 மணியளவில் வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனால் குறித்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் , 517 வாக்களிப்பு நிலையங்களுக்கு 672 வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137
வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (05.05.2025) காலை 7.30 மணி முதல் மாவட்ட
தெரிவத்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான , அ.உமாமகேஸ்வரன் தலைமையில்
மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சிந்துசாவின் ஏற்பாட்டில் வாக்கு பெட்டிகள்
வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Local Election Ballot Boxes To Polling Stations

இந்த மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் ,
மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41
வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.

குறித்த தேர்தலில் 1291
அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிசாரும் பாதுகாப்பு
கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி

வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன்
பேருந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்
தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ்
உத்தியோகத்தர்களுடன் முழங்காவில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும்
முதலாவது பேருந்து இன்றைய தினம் (05.05.2025) காலை 08.30 மணிக்கு
புறப்பட்டுச் சென்றது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Local Election Ballot Boxes To Polling Stations

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான
திரு.S.முரளிதரன் அவர்களும், உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.வே. சிவராசா
அவர்களும் இணைந்து அனுப்பிவைத்தனர்.

தொடர்ச்சியாக ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கான பேரூந்துகளை அனுப்பும் பணிகள்
இடம்பெற்று வருகின்றன.

திருகோணமலை

நாளை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில்
திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா
கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகளை உரிய
இடங்களுக்கு அனுப்புவதற்கான வேலைப்பாடுகள் இன்று (05) நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சிமன்ற தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Local Election Ballot Boxes To Polling Stations

திருகோணமலை தி. விபுலானந்தா கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த
பாதுகாப்புக்கு மத்தியில் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்
செல்லப்படுகின்றன.

பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் அதிரடி படைகள் ஈடுபட்டதை அவதானிக்க
முடிகின்றது.

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் தேர்தல்
மத்தியஸ்தான இந்து கல்லூரியில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள்
வாக்குசீட்டுக்கள் இன்று திங்கட்கிழமை (05) காலை 9.00 எடுத்துச் செல்லும்
நடவடிக்கையினை; மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் மற்றும்
தெருவத்தாட்சியும் அரசாங்க அதிபர் முரளீதரன் தலைமையில் ஆரம்பித்து
வைத்தார்.

மாவட்டத்தில் 2 நகரசபை, 1 மாநகரசபை, 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளுராட்சி
மன்றங்களில் உள்ள 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு
செய்யப்படவுள்ளதுடன் போனஸ் ஆசனம் உட்பட மொத்தமாக 274 பேர் தெரிவுக்காக
தேர்தலில் 11 அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 101 வேட்பாளர்கள்
களமிறங்கியுள்ளதுடன் 4 இலச்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளதுடன் 444 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Local Election Ballot Boxes To Polling Stations

 இந்த தேர்தலையடுத்து மாவட்டத்தில் நகர் மற்றும் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு
படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றதுடன் இதுவரை 353
தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதில் 90 வீதமான முறைப்பாடுகள்
தீர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான்
தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.