ஊழல், மோசடி செய்வதற்காக நிதி வழங்க முடியாது என ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் பின் மே 8ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் ஆரம்பமாகும்.
பிரதேச அபிவிருத்திகள் தொடர்பான முன்மொழிவு
அதன் பின்னர் தங்கள் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பான முன்மொழிவுகளை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்து அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் அவ்வாறு முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் தரப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். குறித்த உள்ளூராட்சி மன்றம் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இருந்தால் அதற்கான நிதியொதுக்கீடு எந்த சந்தேகமும் இன்றி வழங்கப்படும்.
ஆனால் வேறு தரப்புகளின் நிர்வாகத்தின் கீழ் வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி வழங்கப்படாது.
அவர்கள் ஊழல், மோசடி செய்வதற்காக நிதி வழங்க முடியாது.
எனவே பிரதேசத்தின் அபிவிருத்திக்கு நிதி தேவை என்றால் ஊழல், மோசடி , வீண்விரயங்கள் இல்லாத திசைகாட்டியின் கைகளில் நிர்வாகத்தை ஒப்படையுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

