முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake), எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அவர் நேற்றையதினம் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி | Local Elections Likely In April Minister Bimal

”ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் நீண்டகாலமாக
எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்.

வட மாகாண மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக தேசிய மக்கள்
சக்தியை தெரிவு செய்தமைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம்
அமைகிறது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் 

இதேவேளை, கடந்த கால அரசாங்கங்கள் தேர்தல்களை பிற்போட்டிருந்தன.

தற்போது, உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டதிருத்தம்
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி | Local Elections Likely In April Minister Bimal

தற்போது, நீதிமன்றங்களில் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும்
அவற்றினால் தேர்தலுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது.

அதேநேரம், ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் அல்லது நான்காம் வாரத்தில் தேர்தலை
நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த கடற்றொழில்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், தேசிய பிரச்சினைகளை 4 விதமான
அணுகுமுறைகளுடன் கையாண்டு தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கான தற்போதைய
நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்