முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நேர்மையாக செயற்படும் உறுப்பினர்களை தெரிவு செய்யுங்கள்: இம்ரான் மஹ்ரூப்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நேர்மை,நீதி,நியாயம் போன்றவற்றுடன் செயற்படும் உறுப்பினர்களை தெரிவு செய்யுங்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) கோரிக்கை விடுத்துள்ளார்.

 தம்பலகாமம் பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று (05)  இடம்பெற்றது.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இனவாதங்கள் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,குறிப்பாக இன்று இனவாதங்கள் பேசப்படுகின்ற சில விடயங்களை
நாங்கள் பார்க்கின்றோம் அந்த அடிப்படையில் என்னென்ன விடயங்களை சொல்லி ஆட்சியை
கைப்பற்றிய அரசாங்கம் அந்தந்த செயற்பாடுகளில் இருந்து மாற்றமாக நடந்து
கொள்கின்ற நிலையை அவதானிக்க முடிகின்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நேர்மையாக செயற்படும் உறுப்பினர்களை தெரிவு செய்யுங்கள்: இம்ரான் மஹ்ரூப் | Local Elections Speech For Imran Maharoof

அந்த அடிப்படையில் இன்று பல
விடயங்கள் ஏமாற்று தனமாக காணப்படுகிறது. குறிப்பாக வடகிழக்கில் வாழ்கின்ற
தமிழ் ,முஸ்லீம் மக்களுடைய உறவை கூட விமர்சிக்கின்ற அல்லது விரிசலை
ஏற்படுத்தும் அரசியல் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மக்கள் மிகவும்
தெளிவாக இருக்கிறார்கள் எதிர்பார்த்த மற்றும் சரியாக அமையாத காரணத்தினால் இந்த
உள்ளூராட்சி மன்றத்தின் மூலமாக மீண்டும் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த
வேண்டும் அதே போன்று சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பது அவர்களது
எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

பொய் பிரசாரம்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கூட சில கட்சிகள்
சில இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.அதனடிப்படையில் ஐக்கிய மக்கள்
சக்தியில் போட்டியிடும் தமிழ்,சிங்கள,முஸ்லிம்கள் ஒற்றுமையோடு பயணிக்கின்ற
சூழலை கட்சி ஏற்படுத்தியிருக்கிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நேர்மையாக செயற்படும் உறுப்பினர்களை தெரிவு செய்யுங்கள்: இம்ரான் மஹ்ரூப் | Local Elections Speech For Imran Maharoof

 இந்த இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கத்தை நம்பி
வாக்களித்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள இனவாதத்தை வெறுத்து ஆதரவளித்தவர்களுக்கு
அரசாங்கம் இன்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது

எனவே மீண்டும் ஒரு நல் உறவை
ஏற்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை சரியாக பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.

அத்தோடு, பொய் பிரசாரத்திற்கு சந்தர்ப்பத்தை வழங்காமல் உங்கள்
பிரதேச சபைகளில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்கின்ற உறுப்பினர்களை உள்வாங்கி
உண்மை, நேர்மை,நீதி,நியாயம் போன்றவற்றுடன் செயற்படும் உறுப்பினர்களை தெரிவு
செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.