மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (15) இரவு முதல் மஹியாவில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இறுதி கிரியை
அதற்கமைய, நாளை மறுதினம்(17) மாலை 5 மணிக்கு கண்டியில் உள்ள நிட்டவெல குடும்ப மயானத்தில் லொஹான் ரத்வத்தவின் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.

கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று (15) தமது 57வது வயதில் காலமானார்.

