Lokah
டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் மற்றும் சாண்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் லோகா: சாப்டர் 1.
சூப்பர்வுமன் கதைக்களத்தில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் லோகா படம் தமிழிலும் வெளியாகியுள்ளது.
மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
நல்ல கதைக்களத்தை கொண்டு படம் உருவாக படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லாமல் கலெக்ஷன் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரிலீஸ் ஆகி 8 நாட்களில் ரூ. 120 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

