லோகேஷ் கனகராஷ்
விஜய்யுடன் லியோ படத்தை முடித்த கையோடு ரஜினியுடன் இணைந்து கூலி படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஷ்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினியுடன், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், பூஜா ஹெக்டே என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
AK64 படத்தில் இந்த பிரபல நடிகையா?.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்
டாப் ஹீரோ?
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் லோகேஷ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன், அது 100 சதவீதம் உறுதி. அவரது ஆக்சன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தற்போது அஜித் குமார் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். நானும் என் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக இருப்பதால் கொஞ்சம் தள்ளிப்போகிறது.
ஆனால், எனக்கும் அவருக்கும் ஒரு டைம்லைன் அமையும் போது கண்டிப்பாக நான் அவர் படத்தை இயக்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
“100% i will do a film with #Ajithkumar sir💯. I discussed a film with him before 10 months via SureshChandra sir🎬. I want explore my style of Action film with him🔥. He is busy with Racing now, we will collaborate when right time comes♥️”
– #Lokesh pic.twitter.com/bh4mCMroQV— AmuthaBharathi (@CinemaWithAB) July 26, 2025