Courtesy: Sivaa Mayuri
கொழும்பின் (Colombo) புறநகர் மிரிஹான பகுதியில் உள்ள வீடொன்றில் பதிவு இலக்கம் இல்லாத சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அரச பகுப்பாய்வாளரிடம் அறிக்கை கோரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இதுவரை இந்த வாகனம் பதிவு செய்யப்பட்ட ஒன்றா என்பதை அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை.
வாகனங்கள் மீட்கப்படும் சம்பவங்கள்
வெள்ளை நிற Lexus SUV என அடையாளம் காணப்பட்ட இந்த வாகனம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த பின்னர் அடிக்கடி இதுபோன்ற வாகனங்கள் மீட்கப்படும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/luxury-vehicle-recovered-in-colombo-1730097711

