நாம் வரலாற்று ரீதியாக தென்னிலங்கை தலைவர்களுக்கு மட்டும் வாக்களித்து தோல்வியையே அடைந்தோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மூளாய் – வேரம் பகுதியில் இன்று இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“நாம் 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து தோல்வியடைந்தோம்.
2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சஜித் பிரேமதாசவை ஆதரித்து தோல்வியடைந்தோம்.
2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவர் வெற்றியடைந்திருந்தாலும் எமக்கான உரிமைகளை அவர் மீட்டுத் தரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,