விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் (M. A. Sumanthiran) ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் (Illankai Tamil Arasu Kachchi, ITAK) மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது
வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் நேற்றைய தீர்மானம்
கவலைக்குரியது.
விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன்
காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் எப்படி தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் (Tamil National Alliance) தெரியாமல் வந்தாரோ, அதேபோல
அவர் தெரியாமல் துரத்தப்படுவார் எனவும் தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் தெரிவித்தார்.