முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மார்கன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் பல கிரைம் திரில்லர் படங்கள் வெளிவந்துள்ளது, அந்த வகையில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, லியோ ஜான் பால் இயக்கத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் மார்கன் என்ற படத்தில் களம் இறங்கியுள்ளார், இந்த கிரைம் திரில்லர் மக்களை கவர்ந்ததா, பார்ப்போம்.

மார்கன் திரை விமர்சனம் | Maargan Movie Review

கதைக்களம்

போலிஸாக இருக்கும் விஜய் ஆண்டனி, படத்தின் ஆரம்பத்திலேயே விஷ ஊசியால் பாதிப்பட்டு காவல்துறையில் இருந்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரம் விஜய் ஆண்டனிக்கு ஆனது போல் ஒரு பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு கருப்பாக்கி கொலை செய்கின்றனர்.

அதனால் விஜய் ஆண்டனி அன் அபிசியலாக இந்த வழக்கை விசாரிக்க சென்னை வர, அங்கு தமிழறிவு என்ற ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்கிறார்.

மார்கன் திரை விமர்சனம் | Maargan Movie Review

அவரும் விஜய் ஆண்டனி சந்தேகப்பட்டது போலவே அனைத்தையும் செய்ய, அந்த நபருக்கு எதை பார்த்தாலும் அப்படியே நியாபகம் வைத்துக்கொள்ளும் திறமை இருக்க, பிறகு தான் தெரிகிறது அந்த கொலையை அவர் செய்யவில்லை என்று.

பிறகு தமிழறிவு உதவியுடன் அந்த கொலைக்காரனை விஜய் ஆண்டனி கண்டுப்பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

மார்கன் திரை விமர்சனம் | Maargan Movie Review

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஆண்டனி எப்போதும் திரில்லர், வித்தியாசமான கதைக்களம் என்றால் அல்வா சாப்பிடுவது போல அவருக்கு, அப்படித்தான் காவல்துறை அதிகாரியாக படம் முழுவதும் ஒரு கேஸை கண்டுப்பிடிக்க அவர் போராடுவது என நன்றாகவே நடித்துள்ளார்.

அறிமுகம் நடிகர் தமிழறிவாக வரும் அஜய், விஜய் ஆண்டனிக்கு நிகரான கதாபாத்திரம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய் ஆண்டனி தாண்டி இந்த கேஸையே அவர் தான் கண்டிப்பிடித்து தீர்கிறார்.

மார்கன் திரை விமர்சனம் | Maargan Movie Review

அதிலும் சித்தர் சக்தி கிடைத்து தண்ணீரில் மூழ்கி, நடக்காத ஒரு விஷயத்தை தன் ஆன்மா மூலம் தமிழறிவு பார்ப்பது என ஹாலிவுட் மைனாரிட்டி ரிப்போர்ட் அளவிற்கு ஒரு கான்செப்ட் வைத்துள்ளனர்.

தொடர் கொலைகள், அதுவும் ஒரே பேட்டர்ன் யார் செய்திருப்பார்கள் என் பல சுவார்ஸ்யம் இருந்தும் எட்ஜ் ஆப் தி சீட் என்று ஒரு காட்சியும் இல்லை, அதிலும் தமிழறிவு கதாபாத்திரம் சித்தர் கான்செப்ட் என செல்ல, நாம் எந்த பக்கம் கதையை பாலோ செய்வது என்ற குழப்பமும் சில நேரம் நீடிக்கிறது.

மார்கன் திரை விமர்சனம் | Maargan Movie Review

Love Marriage திரைவிமர்சனம்

Love Marriage திரைவிமர்சனம்

படத்தின் மிகப்பெரும் பலம் ஆரம்பம் முதல் முடிவு வரை விசாரணை நோக்கியே படம் செல்கிறது, ப்ளாஸ் பேக் என்று பெரிய காட்சிகள் எல்லாம் இல்லை, அதே நேரத்தில் கிளைமேக்ஸ் இவர் தான் இந்த கொலையை செய்தார் என்று சொல்லுமிடம், மிக மிக அவசரமாக முடித்த பீல்.

எது எப்படியோ ஒரு முக்கியமான மெசெஜ் உடன், அந்த மெசெஜ்க்கு ஏற்ற திரைக்கதையை உண்டாக்கியது சிறப்பு, இசை, ஒளிப்பதிவு அனைத்தும் நன்றாகவே உள்ளது. 

மார்கன் திரை விமர்சனம் | Maargan Movie Review

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை.

கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

நடிகர், நடிகை பங்களிப்பு

பல்ப்ஸ்

இன்னமும் எட்ஜ் ஆப் தி சீட் காட்சிகள் இருந்திருக்கலாம், ஏனெனில் அத்தகைய இடமிருந்தும் மிஸ் செய்துவிட்டனர்.

இது ரியாலிட்டி படமா, இல்லை பேண்டஸி படமா என்ற குழப்பமும் இருக்கிறது.

மொத்தத்தில் மார்கன் திரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக விசிட் அடிக்கலாம். 

மார்கன் திரை விமர்சனம் | Maargan Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.