விடாமுயற்சி
அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஜனவரி 23ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.
50 வினாடி விளம்பரத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகை.. யார் தெரியுமா
படத்தின் கதை
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில், விடாமுயற்சியின் கதை குறித்து சொல்ல முடியுமா என இயக்குநர் மகிழ் திருமேனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மகிழ் திருமேனி “ஒரு மனிதனோட சோர்வடையாத முயற்சிதான் இப்படம். அஜித்தின் கேரக்டருக்கு இந்த படத்தில் சில லேயர்ஸ் இருக்கு. படத்தின் மையக் கதையுடன் உறவுகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமும் இருக்கு. எல்லாத்தையுமே ஒருசேர காப்பாத்தறதுக்கு ஒரு மனிதன் நடத்தக்கூடிய பிரயத்தனம்தான் இந்த கதை” என அவர் கூறியுள்ளார்.