முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவுகூர அநுர தரப்பிற்கு தகுதியில்லை: மா. சக்திவேல் பகிரங்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்கள்
சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவு கூருவதற்கு தகுதி இல்லை என சமூக நீதிக்கான
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். 

சர்வதேச உரிமைகள் தின நினைவு தினத்தையிட்டு இன்று (10) அவர் வெளியி்ட்டுள்ள ஊடக
அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில்,”
இலங்கையில் சட்ட ரீதியில் மனித உரிமை மீறலுக்கும் அதனை செய்பவர்களுக்கு
பாதுகாப்பளிக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் உருவாக்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளாக
ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

பயங்கரவாத தடைசட்டம்

அதேவேளை, கடந்த காலத்தில் இப்போது
ஆட்சி பீடம் ஏறிய ஜேவிபியும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும்
அதற்கு எதிராக குரல் எழுப்பாமல் இருந்ததோடு அந்த சட்டத்தின் பாதுகாப்பில்
ஆட்சி செய்யும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்கள்
சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவு கூருவதற்கு தகுதி இல்லை.

சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவுகூர அநுர தரப்பிற்கு தகுதியில்லை: மா. சக்திவேல் பகிரங்கம் | Mah Shakthivel Accusated Anura Government

இலங்கையில் சட்ட ரீதியில் மனித உரிமை மீறலுக்கும் அதனை செய்பவர்களுக்கு
பாதுகாப்பளிக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் உருவாக்கப்பட்டு கடந்த 45 ஆண்டுகளாக
ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

அதேவேளை கடந்த காலத்தில் இப்போது
ஆட்சி பீடம் ஏறிய ஜே.வி.பியும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதும்
அதற்கு எதிராக குரல் எழுப்பாமல் இருந்ததோடு அந்த சட்டத்தின் பாதுகாப்பில்
ஆட்சி செய்யும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்கள்
சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவு கூருவதற்கு தகுதி இல்லை.

பயங்கரவாத தடை சட்டம், இதனை கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் பாதுகாத்து
வருகின்ற சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியான மக்கள் விடுதலை முன்னணியும்
இச்சட்டத்தால் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இச்சட்டத்திற்கு
எதிராக குரல் எழுப்பாமல் இருந்ததோடு தற்போது இதற்கு ஒத்த புதிய சட்டத்தை
வரையும் வரை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின்
பாதுகாப்பில் ஆட்சி செய்ய விரும்புவது மனித உரிமை மீறலாகும்.

யுத்த காலம் 

இச்சட்டத்தின் கரு தமிழர்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டார்கள், சிறைக்குள்
தள்ளப்பட்டார்கள், தண்டனை காலத்துக்கும் அதிகமாக சிறைக்குள் நாட்களை கழித்துக்
கொண்டிருக்கின்றனர். அரசியல் கைதிகளாக இவர்களை ஏற்றுக் கொள்வதும் அரசியல்
தீர்மானம் எடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதும் மக்கள்
குரலாகவும்.

சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவுகூர அநுர தரப்பிற்கு தகுதியில்லை: மா. சக்திவேல் பகிரங்கம் | Mah Shakthivel Accusated Anura Government

மக்களின் வாழ்வுரிமை காக்க புறப்பட்டவர்களை பயங்கரவாதிகளாக்கி
தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறல்.

அதேவேளை நடந்து முடிந்த யுத்த காலப்பகுதியில் நீதிக்காக குரல் எழுப்பியோர்,
அரசியல் செயற்பாட்டாகள், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர்,
தாக்கப்பட்டனர், காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான நீதி
இன்றும் கிட்டவுமில்லை. நீதிவிசாரணையும் இல்லை. எதிர்பார்க்கும் நீதி கிட்டும்
என்பது தொடர்பிலும் நம்பிக்கை இல்லை. இத்தகைய சூழ்நிலைக்குள் தள்ளுவதும் மனித
உரிமை மீறல் என கருதுகின்றோம்.

யுத்த காலத்தில் மீறப்பட்ட மனித உரிமை மீறல்கள் உள்ளன. படையினரிடம்
கையளிக்கப்பட்டு காணமலாக்கப்பட்டோர் ஆயிரமாயிரம் பேர் உள்ளனர்.

அதற்கு இன்றுவரை விசாரணை இல்லாதிருப்பது மட்டுமல்ல விசாரணை ஆணை குழுக்கள் என்று மக்களை
ஏமாற்றி பாதிக்கப்பட்டவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளுவதும்
மன உளைச்சலுக்குள் உள்ளாக்கப்பட்டு வேதனையில் இயற்கை மரணம் அடைந்தாலும்
அம்மரணங்களை எல்லாம் யுத்தத்தோடு தொடர்புபட்ட கொலைகள் என்று கூற வேண்டும்.

மனித உரிமை மீறல்கள்

இத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இருக்கையில் சர்வதேச மனித உரிமைகள்
தினம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வேதனைக்குரிய ஒரு கரும் நாளாகவே
அடையாளப்படுத்தப்படுகின்றது.

சர்வதேச மனித உரிமை தினத்தை நினைவுகூர அநுர தரப்பிற்கு தகுதியில்லை: மா. சக்திவேல் பகிரங்கம் | Mah Shakthivel Accusated Anura Government

விசாரணைகள் நீண்ட காலமாக இழுத்துக் இழுத்தடிக்கப்படுவதும், குற்றவாளிகள்
அடையாளப்படுத்தப்பட்டாலும் அரச தலையீட்டின் காரணமாக அவர்களுக்கு விடுதலை
அளிப்பதும், சாட்சிகளை மறைப்பதும், குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டோருக்கு உயர் பதவிகள் அளிப்பது நாட்டிலே கடந்த காலம் முழுவதும்
நிலவியது. அது உரிமை மீறலுக்கு ஆர்ச் அங்கீகாரம் கொடுக்கும் இழிவான செயலாகும்.

நாட்டில் இதுவரை 20க்கும் அதிகமான சமூக புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுக நகருக்கு அண்மையில் உயர் பாதுகாப்பு வளையத்திலும் சமூகப்
புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் உயிர் வாழும் உரிமையை பறித்ததற்கு
இன்னும் ஒரு சாட்சியாகும்.

எனவே, சர்வதேச மனித உரிமைகள் தினம் என்பது ஒரு கேலிக்கூத்தாக அமைவதை சமூக
செயற்பாட்டார்கள் விரும்பவில்லை.

பாதிக்கப்பட்டோருக்கு நீதி என்பது உண்மையை
கண்டுபிடிப்பதுமாகும். அது மட்டுமல்ல அதற்கு பின்னால் உள்ள அரசியல்
வெளிகொண்டு வரப்பட்டு அரசியல் நீதியும், சமூக நீதியும் நிலை நிறுத்தப்படல்
வேண்டும். அவ்வாறு நிறுத்தப்பட்டால் மட்டுமே சர்வதேச மனித உரிமை தினம்
அர்த்தமுள்ளதாக அமையும். ஐ.நா மனித உரிமை பேரவை அதற்கான ஆக்கப்பூர்வமான
செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.