மகாராஜா
2024ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று மகாராஜா. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், சாச்சனா, அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி ஆகியோர் நடித்திருந்தனர்.
வித்தியாசமான திரைக்கதையில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ரூ. 110 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா.. தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்தவர்
வசூல்
மேலும் தற்போது சீனாவில் வெளிவந்துள்ள மகாராஜா திரைப்படம், முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையை துவங்கியது.
இந்த நிலையில், இதுவரை சீனாவில் ரூ. 40 கோடிக்கும் மேல் மகாராஜா படம் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் உலகளவில் ரூ. 150 கோடி வரை மகாராஜா வசூல் செய்துள்ளது.