மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கம் பேக் கொடுத்த திரைப்படம் மகாராஜா. இந்த ஆண்டு வெளிவந்த தலை சிறந்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாக மகாராஜாவும் உள்ளது.
இப்படத்தை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த குரங்கு பொம்மை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான திரைக்கதையில் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் இயக்குனரான நித்திலன், மகாராஜா திரைப்படத்திலும் நமக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யப் நடித்திருந்தார்.
இத்தனை கோடி லாபமா
மேலும் மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் திரையரங்கில் வெளிவந்து ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த மகாராஜா திரைப்படம், ஓடிடியிலும் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
கோட் படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எத்தனை கோடி தெரியுமா
ஆம், மகாராஜா திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 17 கோடிக்கு வாங்கியுள்ளது என சொல்லப்படுகிறது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இதுவரை 2 கோடிக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். இதன்மூலம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 150 கோடி வசூல் ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.