மஹா அவதார் நரசிம்மா
இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக சமீபத்தில் வெளிவந்தது மஹா அவதார் நரசிம்மா. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

கேஜிஎப், காந்தாரா போன்ற படங்களை தயாரித்த hombale பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2வில் கலந்துகொண்டுள்ள 8 போட்டியாளர்கள்.. முழு லிஸ்ட் இதோ
வசூல் வேட்டை
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற மஹா அவதார் நரசிம்மா திரைப்படம் வசூலில் முதல் நாளில் இருந்தே வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 175 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் வெளிவந்த அனிமேஷன் திரைப்படங்களில் ரூ. 100 கோடியை கடந்த முதல் படமும் இதுவே ஆகும். விரைவில் ரூ. 200 கோடிக்கும் மேலும் வசூல் செய்து சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
175 CRORES+ worldwide gross & counting…💥💥
The divine saga of #MahavatarNarsimha is rewriting history at the box office.
The roar is unstoppable… experience it in theatres now 🦁#Mahavatar @hombalefilms @AshwinKleem @kleemproduction @VKiragandur @ChaluveG @shilpaadhawan… pic.twitter.com/N13LJBWD4E— Hombale Films (@hombalefilms) August 10, 2025

