எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் சமாதானத்துக்கான கரங்களை நாங்கள் நீட்டிய போது மாவை சேனாதிராஜா சமாதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள செய்தி குறிப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இரங்கல் குறிப்பிலேயே, எமக்கு எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் நாடாளுமன்றத்தில் சந்திக்கையில் இணக்கமாகவே செயற்படுவார்.
சமாதானத்துக்கு ஒத்துழைப்பு
காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளது.
இதேவேளை, மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று (01) நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.