மஹிந்த தொடம்ப கமகே, மீண்டும் அரசியலுக்கு வந்து நுவரெலியா மாநகர சபைக்கு
போட்டியிட வேண்டும் எனக் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (14) நுவரெலியா மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் வாக்காளர்களாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த தொடம்ப கமகேவுக்கு உரிய நுவரெலியா பகுதியிலுள்ள சுற்றுலா விடுதிக்குள் முன்னால் திரண்ட சர்வமத தலைவர்கள், ஆதரவாளர்கள், அவர் மீண்டும் அரசியலுக்கு
வரவேண்டும் என கோரினார்கள்.
வாக்காளர்களின் கோரிக்கை
மஹிந்த தொடம்ப கமகே நுவரெலியா மேயராக செயல்பட்டபோது பல்வேறு மக்கள்
நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார் எனவும் போராட்டக்கார்கள் சுட்டிக்காட்டினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மத்தியில் வந்த தொடம்ப கமகே,
தனக்கு மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும், எனினும்,
வாக்காளர்களின் கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.