மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) மக்களின் துன்பங்களுக்கு மகிழ்ச்சியை தந்த தலைவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe)மேடையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜக விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பேரணியின் மேடையில் உரையாற்றிய அவர்,இதனைத் தெரிவித்தார்.
திருத்தப்பட்ட வாக்கியம்
பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட அவர் அதனை ரணில் விக்ரமசிங்க என திருத்திக் கொண்டார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளார்.