முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், கண்டி மாவட்ட மக்களுக்கு தனது தேவை இல்லை என்பதை பொதுத் தேர்தலில் காட்டியுள்ளதாகவும் அளுத்கமகே கூறியுள்ளார்.
தனது கட்சி அலுவலகத்தில் இன்று (16.11.2024) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இவ்வருடப் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் எரிவாயு சிலின்டர் சின்னத்தில் போட்டியிட்டேன்.
வாக்காளர்கள் 20,401 வாக்குகளையே வழங்கினார்கள். கடந்த தேர்தலில் தான் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தேன்.
மக்களுக்கு தனது அரசியல் தேவையில்லை. தனது அரசியல் பயணத்தின் போது தொடர்ச்சியாக பல்வேறு நபர்களாலும் ஊடகங்களாலும் தம்மை அவதூறாகப் பேசினாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு தனது தொகுதியின் வாக்காளர்களுக்காகவே அரசியலில் இருந்தேன்.” என்றார்.