மக்கள் கூட்டத்தினால் தனது உடலும், மனமும் குணமடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருந்து சமூக ஊடகத்தில் பதிவொன்றினையிட்டு மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். அவர் தனது பதிவில்,
மக்களுடன் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மக்களிடையே இருப்பது என்னை ஒருபோதும் சோர்வடையச் செய்யாது. அது ஒரு பந்தம். அனைவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு.
நம்பிக்கை மற்றும் விசுவாசம்
மக்களின் இதயங்களில் உள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசம் மக்கள் தலைவர் என்ற தைரியத்தை வளர்க்கின்றன.
மக்களுடனான தொடர்பு என்னை உடல் ரீதியாக மேலும் வலிமையாக்குகின்றது. அதேபோல் என் மனதையும் குணப்படுத்துகின்றது.
அவர்களின் நலனை விசாரிக்கவும், நட்பான உரையாடல்களில் ஈடுபடவும் எப்போதும் அன்பான மக்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
மேலும்,எனது அரசியல் நண்பர்களையும் இதன்போது நான் நினைவில் கொள்கின்றேன். அனைவருக்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.