கனடா (Canada) முழுவதும் உள்ள யூத நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதன் போது, மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களான ரொறன்ரோ, மாண்ட்ரீல் மற்றும் நாட்டின் தலைநகரமான ஒட்டாவாவில் உள்ள மருத்துவமனைகள், ஜெப ஆலயங்கள் மற்றும் யூத மையங்கள் ஆகியவற்றுக்க இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒட்டாவா காவல்துறையினர் பல மருத்துவமனைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வெடிபொருட்கள்
மேலும், சம்பவம் தொடர்பில் கனேடியன் மவுண்டட் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, கனடா முழுவதும் RCMP விசாரணை நடத்தி வருகிறது. ஒட்டாவாவில் உள்ள the Queensway Carleton மருத்துவமனைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது மற்றும் விரிவான தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, ரொறன்ரோ காவல்துறையினரும் கட்டிடத் தேடுதல்களின் ஈடுபட்டுள்ளதுடன், வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு
இந்த நிலையில், கனேடிய யூத சமூகங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதே மின்னஞ்சல்களின் நோக்கம் என CJAயின் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வெளியிட்டுள்ள பதிவில், “அவர் தனது பதிவில், “கனடா முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட யூத நிறுவனங்கள் இன்று அச்சுறுத்தல்களால் குறிவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் நான் வெறுப்படைகிறேன். இது அப்பட்டமான யூத விரோதம்” என தெரிவித்துள்ளார்.