முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும்
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும்
எதிர்கால வழி குறித்து விவாதித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் (UNP) வஜிர அபேவர்தன, பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய
கம்மன்பில, முன்னாள் அமைச்சர்கள் அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த,
ஷெஹான் சேமசிங்க, நிமல் லன்சா, நிமல் சிறிபால டி சில்வா, பிரேம்நாத் சி.
தொலவத்த மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
கருத்து வேறுபாடுகள்
இதன்போது, தற்போதைய அரசாங்கத்தால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
இழைக்கப்படும் அநீதி குறித்து தலைவர்கள் விவாதித்ததாக, அனுர பிரியதர்ஷன
யாப்பா தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சந்திப்பில் எந்தவொரு அரசியல் கூட்டணியையும் உருவாக்குவது
குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இது போன்ற சந்திப்பு, 2025 ஜனவரி 30 அன்று நடத்தப்பட்டது.
சிறிசேன மற்றும் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும்,
நல்லாட்சி அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினர்.
எனினும், பின்னர் அவர்கள் தமக்கிடையே கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டனர்
என்பது குறிப்பிடத்தக்கது.