முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிலங்கா படைத்தளபதிகளுக்கான தடை : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மைத்திரி

சிறிலங்காவின் முன்னாள் மூன்று படைத்தளபதிகள் மற்றும் கருணா என நான்கு பேருக்கு பிரித்தானிய(uk) அரசாங்கம் விதித்துள்ள தடை ஒரு சதித்திட்டம் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) தேசிய வீரர்களுக்கு சர்வதேச அளவில் செய்யப்பட்ட அநீதியால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த பாதுகாப்புத் தலைவர்கள் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் போராடியவர்கள். அவர்கள் மக்களைக் கொல்லவில்லை.

அவர்கள் அழிவுகளை ஏற்படுத்தவில்லை

இறுதி இரண்டு வாரங்களை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் இறந்து பிறப்பதில்லை. இனவாத முறையில் அவர்கள் அழிவுகளை ஏற்படுத்தவில்லை. நான் ஐந்து சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். பிரபாகரன் கொல்லப்பட்டபோது பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவன் நான்.

சிறிலங்கா படைத்தளபதிகளுக்கான தடை : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மைத்திரி | Maithris Opinion On The Ban Imposed By Britain

எனவே, கடைசி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். அதனால், எங்கள் முப்படை அதிகாரிகளுக்கு செய்யப்பட்டது மிகவும் அநீதியானது. இவர்கள் நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். எங்கள் இராணுவத்தினர் எத்தனை உயிர்களை தியாகம் செய்தார்கள் அதை நாட்டிற்காகவே செய்தார்கள்.

இது ஒரு சதித்திட்டம்

அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம் போன்றவர்களை எல்.டி.டி.ஈ கொலை செய்தது. அவர்களை ஏன் கொலை செய்தார்கள் இவை பற்றி பேச வேண்டும். ஆனால், எங்கள் இராணுவ உறுப்பினர்களுக்கு செய்யப்பட்டது ஒரு சதித்திட்டம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சிறிலங்கா படைத்தளபதிகளுக்கான தடை : அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மைத்திரி | Maithris Opinion On The Ban Imposed By Britain

யுத்தம் முடிவடையவில்லை என்றால், கொழும்போ பொலன்னறுவையோ மிச்சமிருக்காது. இந்த நாட்டை காப்பாற்றிய தேசிய வீரர்களுக்கு சர்வதேச அளவில் செய்யப்பட்ட அநீதியால் நான் மிகவும் அதிர்ச்சியடைகிறேன், அதேநேரம் துயரமடைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.