தென்னிலங்கையில் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும் வியாபாரத்தில்
ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று மேல் மாகாணப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாணப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில்
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தக் கும்பல் நீண்ட காலமாக ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றும்
வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

