முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொள்கலன் உரிமையாளர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்துங்கள்! எதிர்க்கட்சி சவால்

எதுவித பரிசோதனையும் இன்றி சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் உரிமையாளர்களின் பெயர்களைப் பகிரங்கப்படுத்துமாறு முஜிபுர் ரஹ்மான் எம்.பி.அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.

309 கொள்கலன்கள் விடுவிப்பு

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்வதாக இருந்தால், சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த 309 கொள்கலன்கள் உரிமையாளர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதி வெளியிட வேண்டும். ஆனால் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையை கைவிட்டே ஆட்சி செய்துவருகிறது.

கொள்கலன் உரிமையாளர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்துங்கள்! எதிர்க்கட்சி சவால் | Make The Names Of The Container Owners Public

ஜனாதிபதி அநுரகுமார நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கள், அவர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்த கருத்துக்களுக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளன.

எங்களது திறந்த பொருளாதார கொள்கையை ஜனாதிபதி தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் அவரிடம் இன்னொரு மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் பொய்சொல்வதை நிறுத்தி உண்மை பேசவேண்டும்.

நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்த விடயங்களில் அதிகமானவை பொய்யாகும்.

சுங்கத்தில் இருந்து 309 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்த விடயத்தை சாதாரணமாகவே ஜனாதிபதி கருதுகிறார்.அப்படியென்றால், அதுதொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி ஏன் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருக்கிறார்?

ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் 

309 கொள்கலன்களில் சிவப்பு ஸ்டிகர் ஒட்டப்பட்ட 150 கொள்கலன்களை ஏன் விடுவித்தார்கள். இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

கொள்கலன் உரிமையாளர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்துங்கள்! எதிர்க்கட்சி சவால் | Make The Names Of The Container Owners Public

இதற்கு முன்னர் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றதால்தான் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். மாறாக கடந்த கால அரசாங்கங்கள் செய்த அதே செயலை செய்வதற்கு அல்ல.

மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியைவிட பல மடங்கு மோசடி இடம்பெற்ற வி.எப்.எஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை வெளிப்படுத்துவதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் அதுதொடர்பில் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

அதனால் அரசாங்கம் முடியுமானால் வி.எப்.எஸ் கொடுக்கல் வாங்கலை மோசடியை கண்டுபிடித்துக்காட்டட்டும் என சவால் விடுகிறேன்.

வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்வதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது வெளிப்படை தன்மையை கைவிட்டுள்ளது.

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு தலைவர் நியமனம் இன்னும் இடம்பெறவில்லை. அதனால் தகவல்கள் கேட்டால் வழங்கப்படுவதில்லை என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.