இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தங்கலான் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது தமிழில் கார்த்தியுடன் இணைந்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
மாளவிகா – மோகன்லால்
மேலும் மோகன்லால் உடன் இணைந்து ஹிருதயபூர்வம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவான இப்படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் வருவதாக தகவல் கூறுகின்றன.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அதன் அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோகனன் வெளியிட்டு இருந்தார்.
தேசிய விருது வென்று மக்கள் மனதையும் வென்ற நித்யா மேனனின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்
இந்த பதிவில் “மோகன்லால் சார், சத்யன் சார் போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள் சினிமா மாயாஜாலத்தை எவ்வளவு உயிர்ப்பிக்கிறார்கள் என்பதையும் பார்த்தேன். இதையெல்லாம் அவர்கள் மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் செய்கிறார்கள்” என இன்னும் சில வார்த்தைகளை சேர்த்து பதிவிட்டு இருந்தார்.
பதிலடி கொடுத்த மாளவிகா
இந்த பதிவில் கமன்ட் செய்த ரசிகர் ஒருவர் “65 வயதாகும் நடிகர், 30 வயதான நடிகைக்கு ஜோடியாக நடிப்பதா? என பதிவு செய்தார். இதற்கு மாளவிகா மோகனன், “அவருக்கு ஜோடியாக நான் நடிப்பதாக யார் கூறினார். எதுவும் தெரியாமல் நீங்களாவே ஒரு முடிவுக்கு வர வேண்டாம்” என ரசிகரின் பதிவிற்கு பதிலடி கொடுத்திருந்தார்.