இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சிறப்பு வழிபாட்டின் போது கர்தினால் ரஞ்சித், இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
சட்டம் உருவாக்கப்பட வேண்டும்
புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இணைய
பாதுகாப்பு யோசனை ரத்து, மற்றும் அதிகாரத்தையும் சலுகைகளையும் அனுபவிப்பதை விட, மக்களுக்கு சேவை செய்ய அரச தலைவரை வழிநடத்தும் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.