மாலைதீவு(maldives) வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல்(Abdulla Khaleel) பெப்ரவரி 18 முதல் பெப்ரவரி 21, 2025 வரை இலங்கைக்கு(sri lanka) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, மாலைதீவு வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(anura kumara dissa nayake) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய(harini amarasuriya) ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் விஜித ஹேரத்துடன் சந்திப்பு
மாலைதீவு வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார்கள் என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மாலைதீவு வெளியுறவு செயலாளர் பாத்திமத் இனயாவுடன்(Fathimath Inaya) வெளியுறவு அமைச்சர் கலீல் வருவார் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.