பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று காலை 9.30 மணியளவில் பண்டாரவளை-தியத்தலாவை பகுதிக்கு இடையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊவாபரணகம, ரன்வதிகம பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஷாலிய தனுஜ என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடன் சுமை
அவர் அதிகளவு கடன் வாங்கி கடன் சுமையில் சிக்கி தவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வதால் உயிரை மாய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.