மணிரத்னம் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன தக் லைப் படம் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வி அடைந்தது.
சிம்பு, கமல்ஹாசன் நடித்து இருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதிகம் ட்ரோல்களை தான் படம் சந்தித்தது.

மணிரத்னம் அடுத்த படம்
இந்நிலையில் மணிரத்னம் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக வைத்து தான் மணிரத்னம் அடுத்த படத்தை இயக்குகிறாராம்.
அதில் ஹீரோயினாக ருக்மிணி வசந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


