முன்னாள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சா மனுஷ நாணயக்கார நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
சற்று முன்னர் அவர் இவ்வாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரியளவில் மோசடி
கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகளில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணயக்காரவிற் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பெயரை பயன்படுத்தி பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டதாக மனுஷவின் சகோதரர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.