நாட்டை பிழையான திசையில் திருப்புவதற்காக ஆசிரியர்களை எதிர்க்கட்சியினர் வீதிக்கு இறக்கியுள்ளனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு நல்லதே நடக்கும் என்ற தகவலை பார்த்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியும்
தேசிய மக்கள் சக்தியும் மண்ணெண்ணெய் பட்ட சாரை பாம்பைப் போல் குழப்பம்
அடைகின்றனர் என்றும் அவர் சாடியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்
“தங்களால் இயன்றதை எல்லாம் செய்கிறோம் என்று காட்டும்
எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகள் எப்போதும் கபட அரசியலில் ஈடுபட்டு
வருகின்றனர். அதனால்தான் நாட்டிற்கு ஒரு நற்செய்தி தகவலால் என்ற செய்தியால்
மிகவும் வருத்தப்படுகிறார்கள்.
நாட்டுக்கு நல்ல செய்திகள் வரும் என்பது மக்களுக்கு சுப நாள் உதயமாகும்
என்பதாகும். நாட்டு மக்களுக்கு நல்ல காலைப் பொழுது விடிவதை விரும்பாதவர்கள்
யார் என்பது இந்த இரண்டு மூன்று நாட்களில் உறுதியாகும்.
கொரியா இப்படி பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது அந்நாட்டு மக்கள் நாட்டை
மீட்க அரசுக்கு ஆதரவளித்தனர்.
உலகின் பிற நாடுகளில்
இருந்து இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் நம்
நாடு பிரச்சினையில் சிக்கியபோது, எதிர்க்கட்சிகள் நெருக்கடியை அதிகரிக்கச்
செய்தன.
ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு
பிரதமர் பதவியை பொறுப்பேற்றார். பின்னர் அவர் ஜனாதிபதி பதவியை ஏற்றார்.
தெருக்களில் ஆசிரியர்கள்
அப்போது, நாடாளுமன்றத்துக்கு சிலர் தீ வைக்க முயன்றனர். இது நாட்டின் ஸ்திரத்தன்மையை
தடுக்கும்.
1988, 1989 இல், ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பி பாடசாலைகள் மூடப்பட்டு பிள்ளைகள்
தெருக்களில் இறங்கிய வரலாறு எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது.
நாட்டை பிழையான திசையில் திருப்புவதற்காக ஆசிரியர்களை எதிர்க்கட்சியினர் இன்று வீதிக்கு
இறக்கியுள்ளனர். நாட்டில் குழந்தைகளுக்கு பால் மா இல்லை, மருத்துவமனைகளுக்கு
மருந்துகள் இல்லை எனும்போது நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று
சொன்னவர்கள் இவர்கள்தான்.
சுனில் ஹந்துன்நெத்தியும், டில்வின் சில்வாவும்
வெளிநாடுகளில் உள்ள எமது மக்களுக்கு டொலர்களை நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என
கூறினர்.
ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்தே இந்தக் குழுக்கள்
நாட்டைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. அவர்கள் இன்றும் அதற்கான முயற்சியில்
ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் 15, 2023 அன்று, ஜே.வி.பி மற்றும் ஐ.ம.ச யைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள்
ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கினர்.
சர்வதேச நாணய நிதியம்
அந்த மாதம் 22 ஆம் திகதி, சர்வதேச நாணய
நிதியம் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, அந்த
எதிர்ப்புகளும் வேலைநிறுத்தங்களும் நிறுத்தப்பட்டன. மக்கள் புதிய மூச்சுடன்
எழுந்தால் தமக்கு கஷ்டம் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியும்.
எனவே,
எதிர்க்கட்சிகள்
பொய்யான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் பரப்பி நாட்டை வீழ்த்த
முயற்சிக்கின்றன. இந்த நாட்டின் சாபக்கேடு நயவஞ்சக எதிர்க்கட்சி.
உலகின் பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழில்முனைவோர் பொருளாதார அடியார்கள்
என்று அழைக்கப்படுபவர்கள்தான் தேசிய மக்கள் சக்தியினர்” என்றார்.