பசில் ஜோசப் நடிப்பில் காமெடி கிரைம் திரில்லர் படமாக வெளியாகியுள்ள ‘மரணமாஸ்’ மலையாள படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
கேரளாவில் வயதானவர்களை சீரியல் கில்லர் ஒருவன் வரிசையாக கொலை செய்கிறான்.
அவனை போலீஸ் தேடும்போது சந்தேகத்தின் பசில் ஜோசபை போலீஸ் கைது செய்து விசாரிக்கிறது.
பின்னர் அவர் சீரியல் கில்லர் இல்லை என போலீசார் விடுவிக்க, உண்மையான சீரியல் கில்லர் ஒரு முதியவரை கொலை செய்ய தேடுகிறார்.
அப்போது அந்த முதியவரே கண்முன் வர, அவரை அழைத்துக்கொண்டு பயணிக்க இருவரும் ஒரு பஸ்ஸில் ஏறுகின்றனர்.
அங்கு ஹீரோயினை அந்த முதியவர் பாலியல் துன்புறுத்தல் செய்ய, அவர் பெப்பர் ஸ்ப்ரே அடிக்கிறார். ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை இருக்கும் முதியவர், பெப்பர் ஸ்பிரே தாக்கத்தில் இறக்கிறார்.
அப்போது அந்த பஸ்ஸில் டிரைவர், கண்டக்டர் என 4 பேர் மட்டுமே இருக்க ஹீரோ திடீரென பஸ்ஸில் ஏறுகிறார்.
அதன் பின்னர் முதியவர் சடலம் என்ன ஆனது, சீரியல் கில்லர் போலீசிடம் பிடிப்பட்டாரா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
திரில்லர் படமாக இருந்தாலும் காமெடியில் கலக்கியிருக்கிறார் இயக்குநர் சிவபிரசாத்.
நடிகர் டொவினோ தாமஸ் இணை தயாரிப்பாளராக இருப்பதுடன் ஒரு சீனில் கொடுத்திருக்கும் கெஸ்ட் ரோல், இதுவரை எந்த ஹீரோவும் பண்ணாதது.
ஆனாலும் இது கொஞ்சம் டூமச் தான்.
பசில் ஜோசப் வழக்கம் போல நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்.
குறிப்பாக சீரியஸான இடத்தில் கஞ்சா பீடி பிடித்துவிட்டு சிரித்துக்கொண்டே இருப்பது நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
குட் பேட் அக்லி திரை விமர்சனம்
சீரியல் கில்லாராக வரும் ராஜேஷ் மாதவன் ஆரம்பத்தில் காமெடியாக தோன்றினாலும் ஒரு கட்டத்தில் பார்வையிலேயே மிரட்டுகிறார்.
அதேபோல் சடலமாக நடித்து முதியவரும் அசத்தியிருக்கிறார். ஆனால் அவர் செய்யும் சேட்டைகள் ரொம்ப ஓவர்.
ஐந்து கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை இறுதியில் தப்பிப்பது என பல படங்களில் பார்த்த காட்சிகள்தான் என்றாலும், படம் முழுக்க வரும் காமெடி என்ஜாய் பண்ண வைக்கிறது.
சுரேஷ் கிருஷ்ணாவிடம் லேட் மேரேஜ் ஆஹ்? என கேட்கும் கேள்விக்கு அவர் இல்லை அர்ரேஞ் மேரேஜ் என கூறும் இடம் சிரிப்பலை.
இதுபோல பல ஒன்லைன் காமெடி வசனங்கள் காட்சிகளுடன் ஒன்றி வருவதால் திரைக்கதை தொய்வில்லாமல் நகர்கிறது.
க்ளாப்ஸ்
நடிகர்களின் நடிப்பு
காமெடி காட்சிகள்
திரைக்கதை
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்.