பைசன்
வாழை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பைசன் காளைமாடன். இப்படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இட்லி கடை உலகளவில் 12 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
முதல் விமர்சனம்
வருகிற 17ஆம் தேதி பைசன் திரைப்படம் திரையரங்கில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜின் குருநாதரும் பிரபல இயக்குநருமான ராம், இப்படத்தை பார்த்துவிட்டு தெரிவித்த விமர்சனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பைசன் படத்தை பார்த்துவிட்டு, மாரி செல்வராஜ் இதுவரை எடுத்த படங்களில் இதுதான் தலைசிறந்த படைப்பு என ராம் கூறியுள்ளாராம். இதனை மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இதன்மூலம் பைசன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

